Connect with us

latest news

6600mah பேட்டரி ‌.. 66w சார்ஜர்.. 108mp கேமரா.. கவர்ச்சி அம்சங்களுடன் வெளியான ஹானர் மொபைல்.. என்ன மாடல் ?

Published

on

honor x9c

சைனீஸ் நிறுவனமான ஹானர் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. விலைக்கேற்ற அம்சங்களுடன் புதிய ஹானர் எக்ஸ்9சி 5ஜி (honor x9c 5g) மொபைல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டுடன் இதன் விலை 21,999 ரூபாய்க்கு வருகிறது.

ஜூலை 12-ம் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. மேலும் அன்று முதல் அமேசான் சேல் ஆரம்பிக்கின்றது. சேல் ஆஃபர், பேங்க் ஆஃபர் போன்றவற்றை பயன்படுத்தி இன்னும் குறைவான விலைக்கு இந்த மொபைலை வாங்கிக் கொள்ளலாம்.

honor x9c 5g

honor x9c 5g

honor x9c 5g சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் 2700 *1224 பிக்சல் ரெசல்யூசனுடன் கர்வ் ஓஎல்இடி டிஸ்ப்ளே 120hz ரெஃப்ரஸ் ரேட் உடன் வருகிறது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிராஸசர் 4 நானோ மீட்டரில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 ஆக்டோகோர் பிராஸசர் இதில் உள்ளது. கிராபிக்ஸை பொருத்தவரை அட்ரினோ ஏ 710 ஜி பி யு இதில் கிடைக்கிறது.

இதனால் சிறிய கிராபிக்ஸ் கொண்ட கேம்கள், தினசரி உபகத்திற்கும், மல்டி டாஸ்கிங்ற்க்கும். இந்த மொபைல் எந்த தடையும் இன்றி ஸ்மூத்தாக இயங்க கூடியதாக இருக்கும். கேமரா பொருத்தவரை இதில் 108 மெகாபிக்சல் ஓஐஎஸ் சப்போர்ட்டுடன் வருகிறது. மேலும் 5 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் வருகிறது.

மேலும் செல்பி மற்றும் வீடியோ கால் செய்வதற்க்கு 16 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது. பின்புறப் பேனலில் எல்ஈடி ஃபிளாஷும் வருகிறது. இதில் 6600 mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இதனால் ஒரு நாள் முழுக்க இந்த மொபைல் பயன்பாட்டுக்கு வரும். இதனை சார்ஜ் செய்வதற்கு 66w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *