tech news
பிரவுசிங் அனுபவம் வேற மாதிரி இருக்கும்.. கூகுள் க்ரோமில் புது அப்டேட்
 
																								
												
												
											கூகுள் க்ரோம் தளத்தில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்களில் புதிய வசதிகள் வழங்கப்படுகின்றன. இதற்கான புது அப்டேட் க்ரோம் பிரவுசரை ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்களில் பயன்படுத்துவோர் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த அப்டேட் மூலம் பயனரின் பிரவுசிங் அனுபவம் மேம்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
இந்தமுறை வெளியாகி இருக்கும் அப்டேட்-இல் குறிப்பிடத்தக்க அம்சங்களாக லிசன் டு திஸ் பேஜ் (Listen to this page) மற்றும் மினிமைஸ்டு கஸ்டம் டேப்ஸ் (Minimised custom tabs) உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் க்ரோம் தேடல்களில் அதிக ஆக்ஷன்களும், ரிடிசைன் செய்யப்பட்ட சர்ச் பார், ஷார்ட்கட் சஜெஷன் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.
புதிய அப்டேட் தொடர்பான விவரங்களை கூகுள் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதன்படி க்ரோம் ஆக்ஷன்களில் உள்ளூர் தேடல்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது. உள்ளூர் வியாபாரங்கள் பற்றி தேடும் போது, அவற்றை தொடர்பு கொள்ள: கால், டிரெக்ஷன்ஸ் மற்றும் ரிவ்யூஸ் என மூன்று ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இவற்றை கொண்டு பயனர்கள் குறிப்பிட்ட வியாபாரங்களுக்கு அழைப்புகளை மேற்கொள்வது, அங்கு செல்வதற்கான வழியை அறிந்து கொள்வது மற்றும் அவற்றுக்கு மற்ற பயனர்கள் எவ்வளவு மதிப்பெண் வழங்கியுள்ளனர் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. விரைவில் ஐஓஎஸ் தளத்திலும் வழங்கப்பட உள்ளது.
இதேபோன்று டேப்லெட்களில் அட்ரெஸ் பார் ரிடிசைன் செய்யப்பட்டு கூகுள் மெட்டீரியல் யூ டிசைனுக்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஷார்ட்கட் சஜெஷன் அம்சம் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர் ஒரு வலைதளத்தில் எந்த பகுதியை பார்க்க அதிகம் விரும்புகிறார் என்பதை பரிந்துரைக்கும். பிரவுசரை பயன்படுத்தும் போது நாளடைவில் இந்த அம்சம் துல்லியமாக இயங்கும்.
ஐஓஎஸ் வெர்ஷனில் டிரெண்டிங் சர்ச் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கடந்த ஆண்டு முதல் ஆண்ட்ராயடு வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் அட்ரெஸ் பாரில் லேசாக தட்டினாலே டிரெண்டிங்கில் உள்ள சர்ச் விவரங்கள் பட்டியலிடப்படும். குறிப்பிட்ட டிரெண்ட்-ஐ க்ளிக் செய்யும் போது அதை பற்றி அறிந்து கொள்ள முடியும்.
 
																	
																															
 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											 
											 
											