Connect with us

latest news

ISRO-வின் 4 டன் Bahubali ராக்கெட் – என்னவெல்லாம் ஸ்பெஷல்?

Published

on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பாகுபலி என்று பெயரிடப்பட்ட 4,410 கிலோ எடைகொண்ட ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவி, அதை நிலைநிறுத்தியிருக்கிறது.

ISRO’s ‘Bahubali’ – என்ன ஸ்பெஷல்?

தகவல் தொடர்புக்கென பிரத்யேகமான வசதிகளுடன் கூடிய CMS-03 செயற்கைகோளை விண்ணுக்கு சுமந்து சென்ற LVM3-M5 ராக்கெட்டைத்தான் பாகுபலி என்கிற அடைமொழியோடு அழைக்கிறது இஸ்ரோ. இந்தியில் பாகுபலி என்றால் வலுவான கரங்கள் என்று பொருள். இஸ்ரோ வரலாற்றில் இவ்வளவு எடை கொண்ட செயற்கைக்கோளை ஏவுவது இதுதான் முதல்முறை.

CMS-03 செயற்கைகோள் இந்திய கடற்படையின் அவசர கால தகவல் தொடர்பு மற்றும் விண்வெளியை மையப்படுத்திய தகவல் தொடர்பில் புதிய மைல்கல்லாக இருக்கும் என்கிறது இஸ்ரோ. தகவல் தொடர்புக்காகக் கடந்த 2013-ல் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் 7 வரிசை செயற்கைக் கோள்களுக்கு மாற்றாக இந்த செயற்கைக்கோள் தனது பணியைத் தொடங்கும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் பாதுகாப்பான தகவல் தொடர்பு சேவைகளுக்கென இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டிருக்கிறது.