Connect with us

tech news

அதிகபட்சம் 12GB ரேம், 5200mAh பேட்டரி… ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் சூப்பர் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published

on

ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. ஐடெல் சிட்டி 100 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அழகிய தோற்றம் மற்றும் அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் உறுதியான வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதில் கச்சிதமான டிஸ்ப்ளே, நீட்டிக்கப்பட்ட பேட்டரி ஆயுள் மற்றும் ஸ்மார்ட் ஏஐ அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மிகமெல்லிய டிசைன் மற்றும் குறைந்த எடை கொண்ட யுனிபாடி வடிவமைப்பில் இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சம்- இந்த ஸ்மார்ட்போனுடன் இலவச மேக்னடிக் ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஐடெல் சிட்டி 100 மாடலில் 6.75 இன்ச் HD+ IPS LCD ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் IP64 தரச் சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனஏின் ஃபிரேம் 7.65mm அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் யுனிசாக் T7250 பிராசஸர், 4 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இத்துடன் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

புதிய ஐடெல் சிட்டி 100 ஸ்மார்ட்போன் 5200mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஐவானா 3.0 ஓஎஶ் கொண்டிருக்கிறது. இவைதவிர புதிய ஐடெல் ஸ்மார்ட்போன் ஆன்-டிவைஸ் ஏஐ அம்சங்கள் கொண்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு கேமரா சென்சார்களிலும் ஏஐ சார்ந்த சீன் ஆப்டிமைசேஷன் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை டூயல் பேண்ட் வைபை, ஐஆர் பிளாஸ்டர், ஃபேஸ் அன்லாக் வசதி, எப்எம் ரேடியோ மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் உள்ளது.

இந்திய சந்தையில் ஐடெல் சிட்டி 100 பிளஸ் ஸ்மார்ட்போன் ஃபேரி பர்ப்பில், நேவி புளூ மற்றும் பியூர் டைட்டானியம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது நாடு முழுக்க சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ. 2,999 மதிப்புள்ள மேக்னடிக் ஸ்பீக்கர் இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் 100 நாட்களுக்குள் இலவசமாக ஸ்கிரீனை மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.