Connect with us

latest news

மார்க்கெட் கதற போகுது.. 6000 போதும்.. QLED TV தரும் kodak.. இதுல புதுசா என்ன இருக்கு..?

Published

on

kodak tv

கோடக் நிறுவனம் கேமராவிற்கு பேர் போனது. தற்போது ஹோம் அப்ளையன்ஸ் துறையிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில் 6000 ரூபாய்க்கு கியுஎல்இடி(QLED) டிவி வழங்குகிறது. இது ஸ்பெஷல் எடிஷன் மாடலாக வருகிறது. இந்தக் கோடக் கியூஎல்இடி டிவி ஸ்பெஷல் எடிசன் 24 இன்ச், 32 இன்ச், 40 இன்ச் அளவுகளில் வருகிறது.

இதன் பேனல்கள் சாதாரணமா இல்லாமல் சிறந்த வீடியோ அனுபவத்தை வழங்கக்கூடிய வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த டிவி பிளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்கிறது. மேலும் பேங்க் ஆஃபர்களை பயன்படுத்தும் போது இன்னும் குறைவான விலைக்கு கூட இந்த டிவி வாங்கிக் கொள்ளலாம்.

24 இன்ச் டிவியின் விலை 6000 ரூபாயாகவும் 32 இன்ச் டிவியின் விலை 8000 ரூபாயாகவும், 42 இன்ச் டிவியின் விலை 14,000 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எச்டிஎப்சி, ஐடிஎப் சி, ஆக்சிஸ் போன்ற பேங்க்களின் ஆபர்களை பயன்படுத்தும் போது இன்னும் சிறந்த டிஸ்கவுண்டில் இந்த டிவியை பெற முடியும்.

 

கோடக்  கியூஎல்இடி டிவி ஸ்பெஷல் எடிஷன் சிறப்பம்சங்கள் :
இதன் டிஸ்ப்ளே 24 இன்ச், 32 இன்ச், 40 இன்ச் அளவுகளில் ஃபுல் hd கியூஎல்இடி கொண்ட பெரிய திரை வருகிறது. இந்த பேனல் சிறந்த கலர் மற்றும் தெளிவான வீடியோக்களை காட்டுகிறது. இதன் மூலம் சிறந்த வீடியோ அனுபவத்தை பெறலாம். மேலும் இது பெஸல்லெஸ் வடிவமைப்பை கொண்டுள்ளதால் பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கும்.

மேலும் இதன் உயர்தர வேரியண்டில் அதாவது 32 இன்ச் மற்றும் 40 இன்ச் அளவுகளில் 36 வாட் சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் கொடுக்கப்படுகிறது. இதை லேப்டாப் உடன் இணைத்து மல்டி ஃபங்ஷனலாகவூம் பயன்படுத்தலாம். மேலும் இதில் வைஃபை, மிராகேஷ்ட், யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் வழங்கப்படுகிறது.

இதில் a35 ப்ரோ ப்ராசசர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்மூத் மல்டிமீடியா டாஸ்கிங் மற்றும் கேமிங் போன்றவற்றிற்காக பயன்படுத்தும் போது மிகவும் ஸ்மூத்தாக இயங்குகிறது. மேலும் இந்த டிவியில் ப்ரீ இன்ஸ்டால் ஐஓ சினிமா, youtube, prime video, ஜீ 5 போன்ற செயலிகள் வழங்கப்படுகிறது. மேலும் ப்ரீ இன்ஸ்டால் கேம்கள், ஸ்போர்ட்ஸ் போன்ற அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *