Connect with us

latest news

6600mah பேட்டரி.. 108mp கேமரா.. ஸ்னாப் டிராகன் பிராசசர்.. புது பாமில் களமிறங்கும் ஹானர்.. என்ன மாடல் ?

Published

on

honor x9c 5g

ஹானர் நிறுவனம் என்ட்ரி லெவல் விலையில் புதிய மொபைலை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி புதிய ஹானர் எக்ஸ்9 சி 5ஜி (honor x9c 5g) மொபைல் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருந்தது. தற்போது அதன் வெளியீட்டு தேதி தேதியை அறிவித்துள்ளது ஹானர் வருகிற ஜூலை 7-ம் தேதி இந்த மொபைலை வெளியிடுவதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

honor x9c 5g

honor x9c 5g

ஹானர் எக்ஸ் 9 சி 5ஜி சிறப்பம்சங்கள் :
இதில் 6.78 இன்ச் ஃபுல் hd பிளஸ் கர்வ் எட்ஜ் அமலோட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 1.5k ரெசல்யூசனுடன் 120hz ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது. இதில் என்ட்ரி லெவலுக்கென்று பிறந்த ஸ்னாப் டிராகன் 6 ஜென் 1 ப்ராசசர் வருகிறது. இது தினசரி உபயோகத்திற்கு எந்த தடையும் இன்றி ஸ்மூத்தாக இயங்கும்.

இதில் 8 gb ரேம் மற்றும் 256gb ஸ்டோரேஜ் வேரியன்ட் உள்ளது. மேலும் இது ip 65 ரேட்டிங்குடன் வருகிறது. இதில் ஓஐஎஸ் சப்போர்ட்டுடன் 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதனால் புகைப்படங்களை துல்லியமாக எடுக்க முடியும்.

நேரில் மேலும் செல்ஃபி கேமராவை பொறுத்தவரை 16 எம்பி உடன் வருகிறது. இதில் 10 எக்ஸ் டிஜிட்டல்சும் 4கே வீடியோ ரெக்கார்டிங் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ai பியூச்சர்கள் இந்த ஹானர் எக்ஸ் 9சி 5ஜி மொபைலில் இடம் பெற்றுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 15 உடன் மேஜிக் ஓஎஸ் 9.0 உடன் இயங்குகிறது.

இதற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கொடுக்கப்படும் என்று ஹானர் தெரிவித்துள்ளது. இதில் 6600mah பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 66வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் இதில் 5g, wi-fi, gps, usb டைப் சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.

பட்ஜெட் விலைக்கு ஏற்ற சிறப்பம்சங்களுடன் இந்த மொபைல் வெளியாக உள்ளது. இருப்பினும் விலை மற்றும் மொபைலைப் பற்றி விவரங்கள் ஜூலை 7-ம் தேதி அறிவிக்கப்படும்.