tech news
சாம்சங் ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு… கூடவே இவ்வளவு ஆஃபரா..?
 
																								
												
												
											சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A36 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மிட் ரேஞ்ச் பிரீமியம் பிரிவில் தலைசிறந்த மாடலாக கேலக்ஸி A36 ஸ்மார்ட்போன் விளங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் கேலக்ஸி ஏஐ சப்போர்ட் மற்றும் சாம்சங்கின் ஏஐ சார்ந்த அம்சங்களுக்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் கேலக்ஸி A36 ஸ்மார்ட்போன் இதுவரை சாம்சங் வெளியிட்டதில் மிக மெல்லிய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி A36 5ஜி ஸ்மார்ட்போனிற்கு இந்திய சந்தையில் சூப்பர் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சலுகை விவரங்கள்:
இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி A36 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 32,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 2000 குறைக்கப்பட்டு ரூ. 30,999 விலையிலேயே கிடைக்கிறது. இது மட்டுமின்றி ஹெச்டிஎப்சி வங்கி கார்டு வைத்திருப்பவர்களுக்கு. 2000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இத்துடன் பயனர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்தால் கூடுதலாக தள்ளுபடி பெற முடியும். எக்சேஞ்ச் சலுகை தவிர்த்து பயனர்கள் வங்கி சலுகையோடு சேர்த்தால் கேலக்ஸி A36 5ஜி ஸ்மார்ட்போனினை ரூ. 28,999 விலையில் வாங்கிட முடியும்.
சாம்சங் கேலக்ஸி A36 5ஜி அம்சங்கள்:
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி A36 5ஜி ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD+ sAMOLED டிஸ்ப்ளே, விஷன் பூஸ்டர் தொழில்நுட்பம், குவல்காம் ஸ்னாப்டிராகன் 6s ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. மெமரியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெரியுடன் கிடைக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் IP67 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆறு ஓஎஸ் அப்கிரேடுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் கேலக்ஸி A36 5ஜி ஸ்மார்ட்போன் சாம்சங் நாக்ஸ் (Knox) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி A36 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
 
																	
																															
 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											 
											 
											 
											 
											