latest news
5000mah பேட்டரி.. 45w சார்ஜர்.. மாஸாக வெளிவரப் போகும் சாம்சங் கேலக்ஸி m36 5g..
சாம்சங் நிறுவனம் அதன் சாம்சங் கேலக்ஸி m36 5g மாடலின் அறிமுக டீசரை நேற்று வெளியிட்டது. இதுவரை எப்பொழுது வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இதன் அறிமுக டீசரை வெளியிட்டு மொபைலின் வருகை உறுதி செய்துள்ளது சாம்சங் நிறுவனம்.
m சீரியஸ் பொருத்தவரை இந்தியாவில் அமேசான் இ-காமர்ஸ் தளத்தில் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. மேலும் ஒரு சில ரீடைல் கடைகளிலும் சாம்சங் உடைய m சீரியஸ் மொபைல்கள் கிடைக்கின்றன. இதன் விலைப் பொருத்தவரையில் 20 ஆயிரத்துக்கு கீழ் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது.

Samsung Galaxy M36 5G
சாம்சங் எம் 36 5g சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் அளவுள்ள அமோலோட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 2340 *1080 பிக்சல் ரெசல்யூஷன் உடன் 120 hz ரெஃப்ரெஷ்ரேட்டுடன் வருகிறது. இதில் samsung உடைய எக்ஸினோஸ் 1380 எஸ்ஓசி ப்ராசசர் உடன் வருகிறது. இதற்கு முந்தைய மாடலான m 35 இருந்த அதே சிப்செட் தான் இதுலயும் தொடர்கிறது. சாம்சங் அதில் மாற்றம் செய்யவில்லை.

Samsung Galaxy M36 5G
மேலும் 6ஜிபி ரேம் +128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்களில் கிடைக்கிறது. மேலும் இது ஒன் யு ஐ ஆண்ட்ராய்டு 15 os உடன் இயங்குகிறது. கேமரா அமைப்பை பொருத்தவரையில் பின்புற மூன்று கேமரா செட் அப் உடன் வருகிறது. 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு மற்றும் 5 மெகாபிக்சல் டெலி போட்டோ லென்ஸ் உடன் வருகிறது. முன்புற செல்பி கேமராவை பொருத்தவரையில் 12 மெகாபிக்சல் உடன் வருகிறது. மேலும் இதில் 5000mah பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 45 wசார்ஜிங் வசதி உடன் வருகிறது.
மேலும் விவரங்கள் மொபைல் வெளியான பின்பு சாம்சங் அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இது இ-காமஸ் தளங்களில் ஒன்றான அமேசான் தளத்தில் ரூபாய் 20,000க்கு கீழ் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
