Cricket
ஆரம்பிக்கவே இல்ல.. அதுக்குள்ள தோனியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்
 
																								
												
												
											எம் எஸ் தோனி தனது 26 வது வயதில் 2008 ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டனாக இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். அன்றிலிருந்து 2014 ஆண்டு வரை இந்திய அணியை வழிநடத்தினார் தோனி. 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வந்தார்.
2008 முதல் 2014 ஆம் ஆண்டு வரை நடந்த டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் தோனி 27 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளார். அதற்கு முன் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய சவுரவ் கங்குலியின் 21 வெற்றிகளின் சாதனையை முறியடித்து அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் தோனி.
பின்னர் 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது தனது ஓய்வை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக இந்திய அணியை தலைமை தாங்கினார். அதன் பின்னர் ரோகித் சர்மா இந்தியா டெஸ்ட் அணியின் தலைமை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இருவரும் இப்பொழுது டெஸ்ட் தொடர்களில் இருந்து தனது ஓய்வை அறிவித்து விட்டார்கள்.
இந்நிலையில் இந்திய அணிக்கு புதிய கேப்டன் தேடி வந்த இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இளம் அதிரடி தொடக்க வீரரான சுப்மன் கில் டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக பெற்றுள்ளார். 25 வயதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார். இதனால் தோனியின் சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார் என்றே சொல்லலாம். இருப்பினும் இந்திய அணிக்காக தோனி செய்த சாதனைகள் ஏராளம். அதேபோல சுப்மன் கில்லும் செய்ய வேண்டும் என்பது ரசிகர்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
 
																	
																															
 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											 
											 
											 
											 
											