Connect with us

latest news

Google chrome பயனாளர்களுக்கு இந்தியா கொடுத்த எச்சரிக்கை!

Published

on

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் Computer Emergency Response Team, அதாவது CERT-In, கூகுள் குரோம் பிரவுஸரின் இந்திய பயனாளர்களுக்கு சில பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக எச்சரிக்கை மணியடித்திருக்கிறது.

Google Chrome

கூகுள் குரோம் பிரவுஸரின் வி8 தொழில்நுட்ப அப்டேட்டில் சில பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதை CERT-In சுட்டிக் காட்டியிருக்கிறது. இதனால், பயனாளர்கள் வெளிப்புற ஹேக்கிங் அட்டாக்குகளுக்கு இலக்காகவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்பூஃபிங் அட்டாக்குகள் வாயிலாக பிரவுஸரில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான வங்கிக் கணக்கு, தனியுரிமைத் தகவல்கள் ஆகியவை திருடு போகலாம் என்றும் CERT-In எச்சரித்திருக்கிறது.

யாருக்கெல்லாம் பாதிப்பு?

லினக்ஸ் இயங்குதளத்தில் 142.0.7444.59-க்கு முந்தைய வெர்ஷன்கள்.
விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்களில் 142.0.7444.59/60-க்கு முந்தைய வெர்ஷன்கள்
அதேபோல், மேக் ஓஎஸ்ஸில் 142.0.7444.60-க்கு முந்தைய கூகுள் குரோம் வெர்ஷன்கள்

என்ன செய்ய வேண்டும்?
இந்த வெர்ஷன் கூகுள் குரோம் பிரவுஸர்களைப் பயன்படுத்துபவர்கள் உடனடியாக பிரவுஸர்களை ஆன்லைனில் அப்டேட் செய்துகொள்வதோடு, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் CERT-In வலியுறுத்தியிருக்கிறது.