latest news
ஊசியே வேண்டாம்.. ஆப் மூலம் ‘Sugar Test’ பண்ணலாம்.. ஆப்பிள் அதிரடி!
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள். சாதனங்களில் பலரும் யோசிக்காத கண்ணோட்டத்தில் புதிய அம்சங்கள் மற்றும் அனுபவங்களை வழங்குவதில் பெயர் பெற்ற நிறுவனமாக ஆப்பிள் விளங்குகிறது.
இந்த வரிசையில், ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கணக்கிடும் செயலி ஒன்றை உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இதனை டெஸ்டிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைக்கு இந்த செயலி வெளியிடப்படும் வாய்ப்புகள் குறைவு தான் என்ற போதிலும், இது தொடர்பான பணிகளில் அந்நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆப் மூலம் பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை தாண்டி, பாதிப்பு ஏற்படுமா என்பதை துல்லியமாக தெரிவிக்கும்.
பரிசோதனையில் கலந்து கொண்டவர்களிடம் பலவகை சர்க்கரை நோய் கண்டறியும் பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும், அவர்கள் உட்கொள்ளும் உணவு தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
இதன்பிறகு உணவு உட்கொண்ட பின் அதில் இருக்கும் குளூகோஸ் அளவு மாறுபாட்டை ஆய்வாளர்கள் கணக்கிட்டனர். இந்த ஆப் மூலம் பயனர்கள் ஒவ்வொரு உணவும் எப்படி இரத்தத்தில் சர்க்கரை அளவை மாற்றியமைக்கும் என்பதை தெரிவிக்க ஆய்வாளர்கள் முயற்சி செய்கின்றனர்.
உதாரணத்திற்கு பயனர் பாஸ்தா உணவை உட்கொண்டால், உடலின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும், இதனால் பாஸ்தா உணவை தவிர்த்துவிட்டு புரத சத்து நிறைந்த உணவை உட்கொள்ள ஆப் வலியுறுத்தும். இது தொடர்பான ஆய்வுகளில் இரத்தத்தில் சர்க்கரை அளவு தொடர்பான விவரங்களை சேகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.