latest news
ஸ்னாப் டிராகன் பிராசசர்.. 50 எம்பி சோனி கேமரா.. 5500 mah பேட்டரி.. பட்ஜெட் கிங்காகுமா மோட்டாவின் புதிய மொபைல்..?
மோட்டோ நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிரடியான சிறப்பம்சங்களை வழங்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது மோட்டோ ஜி 96 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் டீசர் இமேஜ் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட்டில் பகிரப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மோட்டோ நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவில் இந்த மொபைலை அறிமுகப்படுத்த உள்ளது என்பதை உறுதியாகிறது. தற்போது லீக்ஸ் அடிப்படையில் இதன் சிறப்பம்சங்கள் இவ்வாறாக இருக்கலாம் என்று இணைய தளங்களில் பரவி வருவதை பார்க்கலாம்.
மோட்டோ ஜி 96 சிறப்பம்சங்கள் :
இதில் 6.6 இன்ச் பி ஓ எல் இ டி (poled)டிஸ்ப்ளே உடன் 144 hz மற்றும் ரேஃப்ரஸ்ரேட் உடன் 10 பிட் கலர் ரேஷியோவில் இதன் டிஸ்ப்ளே அமைப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிராசசர் பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 பயன்ப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வர வாய்ப்பு இருக்கிறது.
கேமரா அமைப்பை பொருத்தவரை இதில் 50 எம்பி சோனி கேமரா மற்றும் 8 எம்பி மேக்ரோ லென்ஸ் ஆகியவை இருக்கலாம். முன்புற கேமரா பொருத்தவரை 32 எம்பி செல்பி கேமரா உடன் இருக்கலாம். மேலும் இதில் 5500 mah பேட்டரி வரக்கூடும். மேலும் இதில் தூசி மற்றும் தண்ணீர் பாதிப்பிலிருந்து தடுக்க சிறந்த ஐபி ரேட்டிங் போன்ற சிறப்பம்சங்கள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலைப் பொருத்தவரை 20,000 முதல் 25,000 பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மொபைலை பற்றிய முழு விவரங்கள் மற்றும் விலை பற்றிய அதிகாரப்பூர் அறிவிப்பு மொபைல் வெளியாகும் என்று முறையாக அறிவிக்கப்படும்.
