Connect with us

tech news

தேதி குறிச்சு வச்சிக்கோங்க… எக்கச்சக்க ஆஃபர் வழங்கும் அமேசான்… எப்போ தெரியுமா?

Published

on

அமேசான் நிறுவனம் பிரைம் டே சேல் 2025 தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. வருடாந்திர அடிப்படையில் நடத்தப்படும் அமேசான் பிரைம் விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் ஏராளமான சலுகைகள், தள்ளுபடி மற்றும் வங்கி சார்ந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன், டிவி, மின்சாதன பொருட்கள், அழகு சாதனம், அமேசான் சாதனங்கள், சமயலறை சாதனங்கள், மளிகை பொருட்கள், தினசரி தேவைகள் என பல்வேறு பிரிவுகளில் கிடைக்கும் அனைத்து பொருட்களுக்கும் சலுகைகள், தள்ளுபடிகள் வழங்கப்படும்.

இதுதவிர புதிய சாதனங்கள் அறிமுகம் மற்றும், முதல் விற்பனைக்கு வரும். பெயருக்கு ஏற்ற வகையில் இந்த விற்பனையில் பிரைம் சந்தா வைத்திருப்பவர்கள் மட்டும் தான் பங்கேற்று பொருட்களை வாங்கிட முடியும்.

அமேசான் பிரைம் டே 2025 சேல் விவரங்கள்:

பிரைம் டே சேல் ஜூலை 12-ம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு தொடங்குகிறது. இந்த விற்பனை ஜூலை 14-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை நடைபெறும். முதல் முறையாக பிரைம் டே சேல் மூன்று நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. முன்னதாக பிரைம் டே விற்பனை இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விற்பனையில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள், எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் பத்து சதவீதம் உடனடி தள்ளுபடி பெற முடியும். இதே போல் மாத தவணை பரிவர்த்தனைகளின் போது ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு பத்து சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு 5 சதவீதம் வரை கேஷ்பேக் மற்றும் கூடுதலாக 5 சதவீதம் கேஷ்பேக் பெற முடியும்.

விலை விவரங்கள்:

பிரைம் டே சேல் 2025 விற்பனையில் பிரைம் சந்தா வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அந்த வகையில், பிரைம் சந்தா இல்லாதவர்கள் கீழே குறிப்பிடப்பட்டு இருக்கும் பிரைம் சந்தா திட்டங்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். அமேசான் பிரைம் சந்தா விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்..

அமேசான் பிரைம் ஒரு மாதம் – ரூ. 299

அமேசான் பிரைம் மூன்று மாதங்கள் – ரூ. 599

அமேசான் பிரைம் ஒரு வருடம் – ரூ. 1499

அமேசான் பிரைம் ஷாப்பிங எடிஷன் ஒரு வருடம் – ரூ. 399

அமேசான் பிரைம் லைட் ஒரு வருடம் – ரூ. 799