latest news
வச்சோம்ல கூகுள் பார்டுக்கு ஆப்பு?..என்னய்யா இவ்ளோ ஸ்பீடா இருந்தா எப்படி!…
ஆர்ட்ஃபிசியல் இண்டெலிஜன்ஸ் தொழில்நுட்பம் தற்போது மிகவும் பிரபலமான ஒரு தொழில்நுட்பமாக திகழ்ந்து வருகிறது. வரும் காலங்கலின் உலகையே இதுதான் ஆளும் எனவும் தெரிகிறது. இக்காலத்து மாணவர்கள் அனைவரும் இந்த தொழில்நுட்பத்தினை பயிலவே ஆர்வம் காட்டுகின்றனர்.

chat GPT
சில நாட்களுக்கு முன் பிரபல கணிப்பொறி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தக்களின் படைப்பான சாட் ஜிபிடி என்ற ஒரு ஆர்டிஃபிசியல் இண்டெலிஜன்ஸ் தொழில்நுட்பத்தினை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நாம் அனம்க்கு தேவையான அனைத்து தகவல்களையும் செய்தி வடிவில் பெற்று கொள்ளலாம்.
அதற்கு பின் பிரபல இணைய நிறுவனமான குகூள் சாட் ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் பார்டு என்ற தொழில்நுட்பத்தினை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இது தொடக்கத்தில் பல தோல்விகளை சந்தித்தாலும் பின் தற்போது வெற்றியடைந்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனது தங்களது சாட் GPT வசதியினை சில நாட்களுக்கு முன் iOS தளத்தில் செயலி வடிவில் கொண்டுவந்தது. தற்போது மைக்ரோசாஃப்ட் தனது அடுத்தகட்ட வளர்ச்சியாக தனது சாட் GPT வசதியினை ஆண்டிராய்டு தளத்தில் உபயோகப்படுத்தும் வசதியினை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இந்த வசதி இந்தியாவில் அடுத்த வாரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

android app
இந்த செயலி ஏற்கனவே கூகுள் பிளே ஸ்டோரில் வரிசையில் இருப்பதாக அந்நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வசதி அடுத்த வாரத்தில் எப்போது வெளிவரப்போகிறது என்பது பற்றிய சரியான தேதி தெரியவில்லை. ஆனால் இதனை நாம் கூகுள் பிளே ஸ்டோரில் இதனை நாம் பெறுவதற்கு முன்கூட்டியே பதிவு செய்து வைத்து கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
