tech news
ஐபோன் சீரிஸ்களில் முதல் முறை… வேற லெவல் சம்பவம் செய்யப்போகும் ஆப்பிள்
 
																								
												
												
											ஆப்பிள் நிறுவனம் தனது முற்றிலும் புதிய ஐபோன் 17 சீரிஸ் மாடல்களை இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஐபோன் சீரிஸ் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியுள்ளன. மேலும், இந்த மாடல்களின் அம்சங்கள் பற்றிய தகவல்களும் அவ்வப்போது வெளியாகத் தான் செய்கின்றன.
இந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் இதுவரை வெளியான ஐபோன் மாடல்களில் இருப்பதை விட அளவில் பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த மாடலில் அதிகபட்சம் 5000mAh பேட்டரி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போது லீக் ஆகி இருக்கும் தகவல் உண்மையாகும் பட்சத்தில், இவ்வளவு பெரிய பேட்டரி கொண்ட முதல் ஐபோன் இது என்பதும் சாதனையாக இருக்கும்.
சமீப காலங்களில் வெளியிடப்படும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் 5000mAh பேட்டரி வழங்குவது மிகவும் சாதாரண வழக்கமாகி விட்டது. சந்தையில் வெளியாகும் ஸ்மார்ட்போன் மாடல்களில் பெரும்பாலானவை 5000mAh பேட்டரி வழக்குவது வழக்கமாக இருக்கிறது. அந்த வரிசையில், தற்போது ஆப்பிள் நிறுவனமும் பெரிய பேட்டரி வழங்கும் முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் ப்ரோ மேக்ஸ் மாடல்களின் பேட்டரியை பொருத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் அப்டேட் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதனை உணர்த்தும் வகையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் அதற்கும் முன்பு வெளியான ஐபோன் 13 மேக்ஸ் மாடலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17, ஐபோன் 17 பிளஸ், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என நான்கு புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யும் என்று இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் மாடல்கள் மேம்பட்ட ஹார்டுவேர், அதிநவீன ஏஐ அம்சங்கள் மற்றும் கேமரா கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
 
																	
																															
 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											 
											 
											 
											 
											