Connect with us

latest news

ஸ்னாப் டிராகன் பிராசசர்.. 5500 mah பேட்டரி.. 68w ஃபாஸ்ட் சார்ஜர்.. 50mp சோனி கேமரா.. விரைவில் அறிமுகமாகும் மோட்டோ மொபைல்.. என்ன மாடல் ?

Published

on

moto g96 5g

இந்தியாவில் மோட்டோ நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது. அந்த வகையில் மோட்டோ ஜி96 5g மாடலை வருகிற ஜூலை 9ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மொபைல் பிரபல இகாமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட்டில் கிடைக்கப்பெறுகிறது.

moto g96 5g

moto g96 5g

மோட்டோ ஜி 96 5g சிறப்பம்சம் :
இதில் 6.6 இன்ச் கர்வ் பிஓஎல்இடி டிஸ்ப்ளே 144 ஹெட்ஸ் ரெப்ரஷ்ரேட்டுடன் 2000 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வாட்டர் டச் பாதுகாப்பு வசதியுடன் வருகிறது. மேலும் இதில் ஸ்னாப்டிராகன் 7s 2 பிராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிராசசர் தினசரி உபயோகத்திற்கு சிறந்ததாக இருக்கும். இதில் 50mp sony கேமரா வருகிறது மற்றும் 8 எம்பி மேக்ரோ லென்ஸ் உடன் டூயல் பின்புற கேமரா வருகிறது.

முன்புற கேமரா அமைப்பை பொருத்தவரை செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 32 எம்பி கேமரா இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 5500 mah பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 68 வாட் ஃபஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ram அமைப்பை பொறுத்தவரை இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் 286 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்டில் வருகிறது.

இதில் 5ஜி, 4g ஓல்ட், வைபை, என்எப்சி, டைப் சி போர்ட் உள்ளிட்ட கணக்டிவிட்டி ஆதரவங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. இதில் ஐபி68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் தடுப்பு பாதுகாப்பு உடன் வருகிறது. மேலும் இண்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் இந்த போனில் இடம் பெற்றுள்ளது. இதன் விலை பொருத்தவரை 20,000 பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *