Connect with us

latest news

10 நிமிஷம் சார்ஜ் போதும்.. 36 மணி நேரம் யூசேஜ்.. வரப்போகுது oneplus-ன் புதிய நெக்பேண்ட்

Published

on

oneplus bullets wireless z3

ஒன் பிளஸ் நிறுவனம் வருகிற ஜூன் 19ஆம் தேதி இந்தியாவில் தனது வயர்லெஸ் நெக் பேண்ட் ஒன் பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட் 3 ( OnePlus Bullets Wireless Z3) மாடல் ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இதனை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் போதும் 36 மணி நேரம் பிளே பேக் அல்லது 21 மணி நேரம் டாக்டைமை கொடுக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. கடந்தாண்டு வெளியான z2 மாடல் சிங்கிள் சார்ஜில் 30 மணி நேரம் மொத்த பிளே பேக்கை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

oneplus bullets wireless z3

oneplus bullets wireless z3

முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் குறைந்த நேரத்தில் சார்ஜ் செய்து நீண்ட நேரம் பயன்படுத்த தக்க சாதனமாக இது விளங்குகிறது. முந்தைய மாடலில் இருந்தது போலவே குவிக் ஸ்விட்ச், வாய்ஸ் அசிஸ்டன்ட், மேக்னெட் கண்ட்ரோல் ஸ்கிப் ட்ராப், போன் கால்ஸ் வால்யூம் மற்றும் ஐபி 55 ரேட்டிங் ஆகிய அம்சங்களில் இது வெளிவர உள்ளது.

வடிவமைப்பை பொறுத்தவரையில் போன வருடம் வெளியான z2 மாடல் போன்றுதான் உள்ளது. அதில் ஏதும் மாற்றம் செய்யப்பட்ட மாதிரி தோன்றவில்லை. இந்த நெக்பேண்ட் விலை விலை 1999 ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை பற்றிய முழு அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

அறிமுகத்துக்கு பிறகு ஆன்லைன் மட்டும் ரீடைல் கடைகளில் இந்த நெக்பேண்ட் கிடைக்கப்பெறும். இதில் ஹைபிரிட் நாய்ஸ் ட்ரான்ஸ்லேஷன் மற்றும் பேக்ரவுண்டில் உள்ள இரைச்சலை 45 டெசிபல் வரை குறைக்கிறது. இதில் ஏஐ கால் நாய்ஸ் கேன்சலேஷன் இருப்பதால் அழைப்புகள் குறித்து உறுதி செய்கிறது. மேலும் இது ஹை குவாலிட்டி சத்தம் மற்றும் சிறப்பான பாஸையும் வழங்குகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *