Connect with us

Sports

உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கும் RCB நிர்வாகம் நிதியுதவி

Published

on

rcb

ஐபிஎல் கிரிக்கெட் இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும். 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்போட்டி இதுவரை 18 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் ஐந்து முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் கோப்பைகளை கைப்பற்றி உள்ளது.

ரசிகர்களின் ஆதரவை பொருத்தவரை அதிக முறை கோப்பைகளை வென்ற இந்த இரு அணிகளுக்கும் தான் எப்போதும் இருக்கும். அதையும் தாண்டி ஒரு அணிக்கு பயங்கரமான மாஸான ரசிகர் கூட்டம் இருக்கும் என்றால் அது ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணிக்கு தான். கடந்த 17 ஆண்டுகளில் ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றாவிட்டாலும் இவர்களுக்கான ரசிகர்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி கொண்டு செல்கிறது.

அந்த வகையில் இறுதியாக அவர்களின் 18 வருட கனவு நினைவாகிவிட்டது. ஒரு வழியாக கோப்பையை வென்று விட்டனர். 18 ஆண்டு கால ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்து வைத்தது ஆர்சிபி அணி. அதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் அதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

rcb

rcb

பெங்களூர் அணியின் நட்சத்திர நாயகன் விராட் கோலி மற்றும் கேப்டன் ரஜட் படித்தார் மற்றும் ஆர்சிபி அணியின் அனைத்து வீரர்களும் கோப்பையுடன் சின்ன சுவாமி மைதானத்தில் நேற்று கலந்து கொண்டனர். அவர்களைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே சாலையில் காணப்பட்டனர்.

கூட்டம் கடுமையாக இருந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். ஒரு பக்கம் ஆர் சி பி கோப்பை வென்றது என்ற மகிழ்ச்சி இருந்தாலும் மறுபக்கம் 11 பேரின் உயிர் பிரிந்தது அந்நாளில் ஏற்பட்ட துயர சம்பவமாக பார்க்கப்பட்டது. உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதி உதவியை அறிவித்தது ஆர் சி பி நிர்வாகம். ”நடந்த துரதிஷ்டவசமான சம்பவம் ஆர்சிபி குடும்பத்திற்கு மிகுந்த வேதனை ஏற்படுத்தி உள்ளது” என்று அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *