tech news
ஆஃபர் விலையில்.. 50 எம்பி சோனி கேமரா 5000 mah பேட்டரி.. ஸ்னாப்டிராகன் 7s gen 2.. 68w சார்ஜர்.. ஆர்டர் பிச்சுக்கும்.. என்ன மாடல் தெரியுமா ?
மோட்டோ நிறுவனத்தின் மிட் ரேஞ்ச் மொபைல் ஆன மோட்டோ ஏட்ஜ் 50 ப்யூஷன் மொபைல் தற்போது ஆஃபர் விலையில் கிடைக்கிறது. 20,000 மேல் இதன் ஆரம்ப மாடல் விலை இருந்த நிலையில் தற்போது விலை குறைப்பு மற்றும் பேங்க் ஆஃபர் எல்லாம் பயன்படுத்தி போக 17,000 முதல்18,000 விலையில் கிடைக்கப்பெறுகிறது.
இது போக இந்த மொபைலுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆபரும் இருக்கிறது. இதனை பயன்படுத்தி இன்னும் விலை குறைவாக இந்த மொபைலை பெற்றுக் கொள்ளலாம். மோட்டோ மொபைல் பொறுத்தவரை அதிக வசதியுடன் தரமான மொபைலை வழங்குவார்கள். அந்த வகையில் இந்த மொபைலிலும் பியூச்சர்கள் அள்ளி தெளிக்கப்பட்டு இருக்கிறது.

moto mobiles
மோட்டோ எட்ஜ் 50 பியூஷன் சிறப்பம்சங்கள் :
கொடுக்கிற காசுக்கு தரமான வசதிகளை வழங்கும் மோட்டோ. அந்த வகையில் இதில் 6.7 இன்ச் பிஓஎல்இடி டிஸ்ப்ளே 144 ஹெட்ஸ் ரெஃப்ரஸ் ரேட்டுடன் ஃபுல் hd பிளஸ் குவாலிட்டியில் 360ஹெட்ஸ் டச் சாம்பிலிங் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. மேலும் இதில் ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும் மூன்று வருட சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது.
இதில் ஸ்னாப் டிராகன் 7s ஜென்2 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தினசரி உபயோகத்திற்கு எந்த ஒரு இடையூறு இல்லாமல் ஸ்மூத்தாக இயங்கும். மேலும் இதில் 50 எம்பி சோனி கேமரா மற்றும் 13 எம்பி அல்ட்ரா வயடு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்பி கேமராவை பொறுத்த வரை 32 மெகாபிக்சல் உடன் வருகிறது. இதில் 5000 பேட்டரி உள்ளது இதனை சார்ஜ் செய்வதற்கு 68வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பட்ஜெட்டுக்கு ஏற்ப வசதிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறது மோட்டோ நிறுவனம்.
