latest news
டைமண்ட்சிட்டி 7060.. 50mp சோனி கேமரா.. 5200 mah பேட்டரி.. புது மாடலை களம் இறக்கும் மோட்டோ..? இனி செம போட்டி தான்
மோட்டரோலா நிறுவனம் பிளக்ஷிப் மிட் ரேன்ஜில் புதிய 5g மொபைலை ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது. அந்த மொபைல் கூடிய விரைவில் உலக நாடுகளிலும் இந்தியாவிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் ஜப்பானில் நேற்று மோட்டோ ஜி 66j 5g மொபைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி 66 j5g சிறப்பம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் கொண்ட ஃபுல் ஹெச்டி பிளஸ் lcd டிஸ்ப்ளே 120 ஹெச் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் 2400 * 1080 பிக்சல் ரெசல்யூசனுடன் வருகிறது. மேலும் டிஸ்ப்ளே பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

moto g66j 5g
மீடியாடெக் டைமண்ட் சிட்டி 7060 பிராசசர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 5g பிராசசர் தினசரி உபயோகத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாமல் மிகவும் ஸ்மூத்தாக செயல்படக்கூடியது. மேலும் இதில் 50 எம்பி சோனி எல்வைடி-600 சென்சார் கொண்ட பிரைமரி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
8 எம் பி அல்ட்ரா வைடு கேமரா கொண்டு வருகிறது. மேலும் முன்புற கேமராவை பொருத்தவரை 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வருகிறது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வசதியுடன் இந்த மோட்டோ ஜி 66 j 5g ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலில் இரண்டு சிம் கார்டு மற்றும் ஒரு எஸ்டி கார்டு பயன்படுத்தும் ஆப்ஷனும் உள்ளது.
வாட்டர் மட்டும் டஸ்ட் பாதுகாப்பு சான்றிதழான ஐபி 69 ரேட்டிங் உடன் வருகிறது. மேலும் இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்று பல ஃபோன்களில் கிடைக்காத 3.5 mm ஜாக் வருகிறது. மேலும் டூயல் மைக்ரோபோன்கள் சைடு மவுண்டன் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது.
மேலும் இதில் 5200 mah பேட்டரி வருகிறது. மேலும் இதில் 5 ஜி,வைஃபை 5 ப்ளூடூத் 5.3,என் எஃப் சி, பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களும் உள்ளது. இந்த போன் ஜப்பானில் (jpy~ 34,800) விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 20000 ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ளது. கூடிய விரைவில் மோட்டோ நிறுவனம் இந்த ஜி 66 j5g மொபைலை இந்தியாவில் இதே விலையில் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
