Connect with us

latest news

7000mah பேட்டரி.. 100w சார்ஜர்.. ஸ்னாப்டிராகன் 8 எலைட்.. 50mp கேமரா.. அனல் பறக்கும் அம்சங்களுடன் வரும் ஐகூ.. என்ன மாடல் ?

Published

on

iqoo 15

ஐகூ நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் மாடலான ஐகூ 15 சீனாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்பொழுது விற்பனையில் இருக்கும் 13 பிளாக்ஷிப் ரேஞ்சில் கலக்கி வருகிறது. இதன் அடுத்த மாடலாக 14 வரும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் சைனா,தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் 4-ம் நம்பர் என்பது ஒரு கெட்ட செய்தியை குறிக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

அதனால் ஐகூ 14 ரிலீஸ் வெளியிடாமல் டைரக்டாக 15 மாடலுக்கு செல்கிறது.
இந்த ஐகூ15 அல்ட்ரா மாடல் என்னென்ன சிறப்பு அம்சங்களை கொண்டிருக்குது என்பதை பார்க்கலாம். இந்த தகவல் அனைத்தும் லீக்ஸின் அடிப்படையில் பெறப்பட்டது.

இதில் 6.5 இன்ச் அளவுள்ள ஓஎல்இ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஐகூ 15 அல்ட்ரா போனில் 1.5k ரெசல்யூஷன் உடன் 120hz ரெஃப்ரஸ்ரேட் உடன் வருகிறது. மேலும் இதில் snapdragon 8 எலைட் 2 பிராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் போனில் கேமிங், மல்டி டாஸ்கிங், எடிட்டிங் போன்ற வேலைகளை எந்த ஒரு தடையும் இன்றி ஸ்மூத்தாக செய்ய முடியும்.

அதே போல இதில் 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா 50 எம்பி டெலி போட்டோ லென்ஸ் உடன் வருகிறது. இதில் 4k வீடியோ சப்போட்டும் உள்ளது. முன்புற கேமராவை பொருத்தவரின் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வருகிறது. இது தவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளது. மேலும் இதில் ai அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் இடம் பெற்றுள்ளது.

முந்தைய மாடலை விட இதில் சாஃப்ட்வேர் மேம்படுத்துதலில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 7000mah பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 100w சார்ஜிங் வசதியும் இருக்கிறது. இந்த ஐகூ15 அல்ட்ரா மாடல் இந்தியாவில் 50,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் விலைக்கேற்ற அம்சங்களுடன் வெளிவரும் என்பதில் மாற்று கருத்தில்லை.