tech news
இனி ஆடர் பறக்க போகுது.. 7550mah பேட்டரி.. 50 mp சோனி கேமரா.. 90w சார்ஜர்.. என்ன மாடல் தெரியுமா..?
போக்கோ நிறுவனத்தின் poco f7 5g மாடல் சமீபத்தில் இந்தியாவில் ஆறுமுகம் செய்யப்பட்டது. தற்போது இதன் விற்பனை நாளை முதல் பிளிப்கார்ட் தளத்தில் தொடங்குகிறது. இதில் அப்படி என்னென்ன தனிச்சிறப்புகள் உள்ளது என்பதை பார்க்கலாம்.
poco f7 5g சிறப்பம்சங்கள் :
இதில் 6.8 அமலோட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது 1.5k ரெசல்யூஷன் உடன், 120ஹட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் 3,200 பிக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இந்த மொபைலை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது முற்றிலும் கேமிங் பிரியர்களுக்கானது.

poco f7
இதில் கேமிங் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் அதிக நேரம் மல்டிடாஸ்கிங் உபயோகிக்கும் நபர்களுக்கு இந்த மொபைல் பக்காவாக சூட் ஆகும். இதில் ஸ்னாப்டிராகன் 8 எஸ் ஜென் 4 பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கேமிங் மற்றும் மல்டிடாஸ்கிங் செயல்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் சிறப்பாக இயங்கக்கூடியது.
மேலும் இதில் ஆண்ட்ராய்டு 15 os உடன் வருகிறது கேமரா பொருத்தவரையில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. மேலும் ஓ ஐ எஸ் 4k வீடியோ சூட் கிடைக்கிறது. 7550mah பேட்டரி கிடைக்கிறது. இதனை சார்ஜ் செய்வதற்கு 90w பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
இதில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி, 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட் உள்ளது. விலைப் பொருத்தவரை 31,999 ஆகவும் 33,999 ஆகவும் இருக்கிறது. பேங்க் ஆஃபரை பொருத்தவரை 2000 தள்ளுபடி கிடக்கிறது. ஆகவே இன்னும் குறைந்த விலைக்கு இந்த மொபைலை வாங்கிக் கொள்ளலாம்.
