Connect with us

Cricket

டோனி, விராட், ரோகித்.. புது பஞ்சாயத்தில் சிக்கிய சேவாக்

Published

on

சமூக வலைதளங்களில் தற்போதைய டிரெண்ட் திஸ் ஆர் தட் (This or That) எனும் சேலஞ்ச். இதில் நட்சத்திரங்களிடம் இரண்டு பிரபலமான பெயர்களில் ஒன்றை தேர்வு செய்ய கேள்வி எழுப்பப்படுகிறது. இதேபோன்ற சேலஞ்சில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் சமீபத்திய டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரின் போது பங்கேற்றார்.

கிரிக்கெட்டில் தனது பேட்டிங்கின் போது அதிரடி ஆட்டம் ஆடக்கூடிய விரேந்திர சேவாக், நேர்காணல்களிலும் இதே போக்கை பின்பற்றி, தடாலடி பதில்களை அளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். திஸ் ஆர் தட் சேலஞ்சில் அவரிடம் இந்திய அணியின் மூன்று உச்ச நட்சத்திரங்கள்- விராட் கோலி, எம்எஸ் டோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது பெயர்களில் ஒன்றை தேர்வு செய்ய கேட்கப்பட்டது.

அப்போது அவர் அளித்த பதில் இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்திய கிரிக்கெட்டில் மூன்று வீரர்களும் தவிர்க்க முடியாத அளவுக்கு சாதனைகளை படைத்துள்ள நிலையில், சேவாக் அளித்த பதிலால் அவரவர் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

முதலில் எம்எஸ் டோனி மற்றும் பென் ஸ்டோக்ஸ் இடையில் சிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு விரேந்திர சேவாக் எம்எஸ் டோனியை தேர்வு செய்தார். அதன்பிறகு எம்எஸ் டோனி மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் ஜாம்பவான் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் இடையே சிறந்தவர் யார் என்ற கேள்விக்கு விரேந்திர சேவாக் ஏபி டி வில்லியர்ஸ்-ஐ தேர்வு செய்தார்.

இதேபோன்று டி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி என இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு சேவாக் கோலியை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து கோலி மற்றும் ரோகித் சர்மா இடையில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலையில் சேவாக் சற்றும் யோசிக்காமல் ரோகித் சர்மா பெயரை தேர்வு செய்தார்.

விரேந்திர சேவாக் தற்போது அளித்துள்ள பதில்களில் எம்எஸ் டோனி மற்றும் விராட் கோலி ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *